

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை பணியாளர்கள், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள தீயணைப்பு ஊர்திகள் மூலம் கிருமி நாசினிகள் தெளித்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதற்கென தீயணைப்பு ஊர்திகள் மூலம் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு 6.5 எச்.பி பம்பு மற்றும் கவச உடைகள், உபகரணங்களை கொரோனா தடுப்பு நிதியிலிருந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார். தொடர்ந்து இந்த உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் சார்பில் செயல் விளக்கமுறை காண்பிக்கப்பட்டது.