கோவை மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரிப்பு

கோவை மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 130 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பூண்டு
பூண்டு
Published on

கோவை:

கோவை மார்க்கெட்டுக்கு கர்நாடகம், மகராஷ்டிரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஜாம் நகரில் இருந்தும், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவை மார்க்கெட்டுக்கு பூண்டு கொண்டு வரப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ. 30 முதல் 35 வரை விற்பனையானது. தற்போது பூண்டு வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ. 130 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மலை பூண்டு ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தை விட தற்போது பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

கோவை மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 15-க்கும், பெரிய வெங்காயம் ரூ.18-க்கும், சின்னவெங்காயம் ரூ. 35-க்கும் விற்பனையாகிறது.

முட்டை கோஸ் ரூ. 26-க்கும், பீன்ஸ் ரூ. 50-க்கும், கேரட் ரூ. 40-க்கும்,கத்தரிக்காய் ரூ. 20-க்கும், வெண்டைக்காய் ரூ. 30-க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், பூணிக்காய் ரூ. 10-க்கும், அரசாணிக்காய் ரூ.30-க்கும் பழைய இஞ்சி ரூ. 150-க்கும், புதிய இஞ்சி ரூ. 100-க்கும், சேனை கிழங்கு ரூ. 76-க்கும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com