முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை:

முன்னாள் நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி, கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர்.

கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர். இவரது மரணம் நாட்டிற்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com