தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி.
முதல்வர் பழனிசாமி.
Published on

சென்னை:

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடாப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் மறைந்த சி.பா ஆதித்தனார் அவர்களின் 116-வது பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com