கொரோனா கள நிலவரம்- மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில்

ஊரடங்கு உத்தரவு வருகிற 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com