அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
Published on

சென்னை:

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்தவர், துரைக்கண்ணு. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

இந்நிலையில், இன்று காலை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என்றார்.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிவன்னியடி கிராமத்தில் இன்று உடல் இன்று செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com