முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவி பழனி கோவிலில் சாமி தரிசனம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதா பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவி பழனி கோவிலில் சாமி தரிசனம்
Published on

பழனி:

தமிழக முதல்வர் பழனிசாமி மனைவி ராதா பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவரை இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.

உச்சிகால பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சணை செய்து மூலவரை தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் போகர் சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து நீங்கி தொடர்ந்து அவரது தலைமையிலான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக பழனி முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை பவுர்ணமி நாளில் இந்த வழிபாடு நடைபெற்றதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

முதல்வர் மனைவி ராதாவுடன் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்து விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com