சூடான் நாட்டில் மரணம் அடைந்த 3 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- எடப்பாடி பழனிசாமி

சூடான் நாட்டில் மரணம் அடைந்த 3 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் 3.12.2019 அன்று கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த, நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் மற்றும் கடலூர் மாவட்டம், விருதாசலம் வட்டம், செம்பளாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின மகன் ஜெயக்குமார் பண்ருட்டி வட்டம், மானாடி குப்பன் கிராமத்தைச் சேர்ந்த முருவன் என்பவரின் மகன் ராஜசேகர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்து துயரச் செய்தியை அறிந்த உடனேயே, சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் மோடியை 4.12.2019 அன்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராமகிருஷ்ணன், ஜெயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com