மீலாதுன் நபி திருநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மீலாதுநபியை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை “மீலாதுன் நபி” திருநாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதகுலம் மேன்மை அடைந்திட இறைத்தூதர் நபிகள் நாயகம் எடுத்துரைத்த, “அனைவரிடத்திலும் உண்மையாக இருங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்புடன் பழகுங்கள், மனிதர்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை” போன்ற போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றமும், அமைதியும் பெறலாம்.

உலகில் அன்பு செழிக்கவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அண்ணல் நபிகள் நாயகனின் அருட்போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும் என்று இப்பொன்னாளில் கேட்டுக் கொண்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com