வார்னருடன் மோதல்: தென்ஆப்பிரிக்க வீரர் டிகாக்குக்கு அபராதம்

டர்பன் டெஸ்டின் 4-வது நாள் தேனீர் இடைவேளையின் போது, டேவிட் வார்னருடன் மோதலில் ஈடுபட்ட டி காக்குக்கு போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. #DavidWarner #QuintondeKock #AUSvSA
வார்னருடன் மோதல்: தென்ஆப்பிரிக்க வீரர் டிகாக்குக்கு அபராதம்
Published on

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின் டான் டிகாக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கூறுகையில், டேவிட் வார்னரின் மனைவி குறித்து டிகாக் திட்டியதால் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் டேவிட் வார்னருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் டிகாக்குக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com