

புதுடெல்லி:
இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பலரை கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த 41 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதில் 38 பேர் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஹுக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள போர்க்கப்பல் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவார்கள். இங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 11-ந் தேதி கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 3 பேர் டெல்லி மெட்ரோ பாதுகாப்பு பிரிவில் பணியில் இருந்தவர்கள். இதுவரை துணை ராணுவப்படையில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா, 811 வீரர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.