டுவிட்டரில் டிரெண்டிங் ஆன குழந்தைகள் தினம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து

குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் குழந்தைகள் தினம் டிரெண்டிங்கில் உள்ளது.
டுவிட்டரில் டிரெண்டிங் ஆன குழந்தைகள் தினம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து
Published on

இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகளால் ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைக்கப்படும் தலைவருமான ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று நேருவின் 128-வது பிறந்தநாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

டுவிட்டரில் ‘குழந்தைகள் தினம்’ என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதலே இந்தியா மட்டுமின்றி உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. தலைவர்கள் டுவிட்டர் மூலம் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com