

நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே புத்தன்துறை நங்கூரான் பிலா விளையை சேர்ந்தவர் சிவா. கட்டிட தொழிலாளி. இவரது மகள் சிவலக்சனா (வயது 1 1/2).
குழந்தை நேற்று இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவாவும், அவரது மனைவியும் வீட்டின் வெளியே பேசிக் கொண்டிருந்தனர். திடீரென சிவலக்சனாவை காணவில்லை. இதையடுத்து அக்கம், பக்கத்தில் தேடினார்கள். அப்போது வீட்டின் முன்பு இருந்த பாத்திரம் ஒன்றில் இருந்த தண்ணீரில் சிவலக்சனா தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா பாத்திரத்தில் கிடந்த மகளை மீட்டு சிகிச் சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவலக்சனா இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். பலியான சிவலக்சனாவின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் தவசிலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிவலக்சனாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். #tamilnews