

சென்னை:
தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில்:-
* நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சமூகநலத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.