அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “நாகை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அவர்களின் மனைவி திருமதி.கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்துவாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

அமைச்சர் @OSManianofl அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 

ஓ.எஸ்.மணியன் அவர்களை தொலைபேசியில் அழைத்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com