மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு
Published on

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டாநதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டாநதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 17 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 4.5.2018 முதல் 9.5.2018 வரை 6 நாட்களுக்கு, வினாடிக்கு 80 கன அடி வீதம், தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3,190.96 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com