செய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவர் கைது

செய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செய்யாறு:

செய்யாறு டவுன் கண்ணியம்நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லதா இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக லதா கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து ரஜினி காந்த் தனது மனைவியையும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் லதாவின் அண்ணன் கார் டிரைவரான சரவணனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில் ரஜினிகாந்த் பலத்த காயம் அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com