சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி பேசிய ரஜினி வசனம்

கேப்டன் டோனி, காலா படத்தில் ரஜினி பேசும், கியாரே செட்டிங்கா என்ற வசனத்தை ரஜினி ஸ்டைலிலேயே பேசி அசத்தி இருக்கிறார். #Dhoni #Rajinikanth
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி பேசிய ரஜினி வசனம்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டு தடைக்கு பிறகு இந்த போட்டியில் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்குகிறது. இதனால் இந்த போட்டிக்கு இப்போதே தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்த அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில், டோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த அணி வீரர்கள் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ரஜினியின் ‘காலா’ படத்தின் டீசரில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் பேசி, இதை பார்க்கிறவர்களின் ரசனையை அதிகமாக்கி இருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் கேப்டன் டோனி, ‘காலா’ படத்தில் ரஜினி பேசும், “கியாரே... செட்டிங்கா...” என்ற வசனத்தை ரஜினி ஸ்டைலிலேயே பேசி அசத்தி இருக்கிறார். இதை ரஜினி ரசிகர்களும், கிரிக்கெட் அபிமானிகளும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். #Dhoni #Rajinikanth

X

Maalai Malar
www.maalaimalar.com