சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையம்
மெட்ரோ ரெயில் நிலையம்
Published on

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல்  மெட்ரோ ரெயில் நிலையம் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com