

சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் சென்டிரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்கள் கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, மூன்று நாட்களுக்கு சென்டிரல் - விமான நிலையம், டிஎம்எஸ் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் பொதுமக்கல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
நேற்றுடன் லட்சக்கணக்கான மக்கள் இலவசமாக பயணித்த நிலையில், இன்றும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் வரவேற்பை அடுத்து நாளையும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetro