கோவில்களில் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக கோவில்களில் சட்ட விரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

‘பெரியபாளையம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு மாயாண்டி என்பவர் கட்டணம் வசூலிக்கிறார். கட்டணம் வசூலிக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். வாகன கட்டணம் வசூலிக்க மாயாண்டிக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அந்த உத்தரவில், ‘தமிழக கோவில்களில் சட்ட விரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சட்ட விரோதமாக எந்த அதிகாரமும் இல்லாமல் நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com