சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கேஎன் நேரு , துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கவுள்ள திமுக உட்கட்சி தேர்தல் பற்றி மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

என்பிஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரியும், ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com