சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கான வாக்குசாவடி பட்டியல்- தேர்தல் அதிகாரி வெளியிட்டார்

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி சாதாரண உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,489 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 5,759 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று முதல் அனைத்து வார்டு அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும், மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com