பழைய விலையில் புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த ஒன்பிளஸ் 5T

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதுவரவு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 5T வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் இல்லாமல் புதிய ஒன்பிளஸ் 5T மாடலில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பழைய விலையில் புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த ஒன்பிளஸ் 5T
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 5 ஸ்மாரப்ட்போன் வெளியாகி ஐந்து மாதங்களே ஆகியுள்ள நிலையில் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட கேமரா, சிறப்பான டிஸ்ப்ளே, முக அங்கீகார வசதியை வழங்கும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை புதிய ஒன்பிளஸ் 5T கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் இல்லாமல் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

புதிய டிஸ்ப்ளே:

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.01 இன்ச் ஃபுல் எச்டி+ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 80.5 சதவிகிதம் பாடி-டூஸ்கிரீன் ரேஷியோ வழங்கப்ட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது மெல்லிய பெசல் வடிவமைப்பும் பக்கவாட்டுகளில் முழுமையாக பெசல்கள் நீக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளேவை பொருத்த வரை முந்தைய ஸ்மார்ட்போனை விட பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் வழங்கப்படவில்லை. இதன் செராமிக் கைரேகை ஸ்கேனர் போனின் பின்புறம் வழங்ப்பட்டுள்ளது. எனினும் ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் 401 ppi டென்சிட்டி வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கேமரா:

ஒன்பிளஸ் 3T செல்ஃபி கேமராவில் வழங்கப்பட்ட இன்டெலிஜென்ட் பிக்சல் தொழில்நுட்பம் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்களை ஒன்றாக இணைத்து, குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். ஒன்பிளஸ் 5 போன்றே ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனிலும் 16 எம்பி சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல் மற்றும் f/2.0 அப்ரேச்சர் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க ஏதுவாக ஒன்பிளஸ் 5T கேமரா வெளியே இழுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை போன்றே ஒன்பிளஸ் 5T மாடலிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல் மற்றும் 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற புது அம்சங்கள்:

புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மற்றொரு புதிய அம்சமாக மேம்படுத்தப்பட்ட முக அங்கீகார வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனினை பார்த்தே அன்லாக் செய்ய முடியும். இந்த அம்சம் ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக அன்லாக் செய்ய 100க்கும் அதிகமான ஃபேஷியல் அம்சங்களை பயன்படுத்தும் என தெரிவித்துள்ளது.

புதிய அம்சங்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் முந்தைய மாடலில் வழங்கப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் ஆக்டாகோர் ஸ்ன்ப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிPன் ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்:

மெமரியும் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை போன்றே 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பேட்டரியும் முந்தைய மாடலை போன்று 3300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரை மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுக்க ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.

சில சிறப்பம்சங்களை போன்றே ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T விலை ஒன்றாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 5T விலை ரூ.32,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட டாப் எண்ட் மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒன்பிளஸ் விற்பனை மையத்திலும் நவம்பர் 21-ம் தேதி மாலை 4.30 மணிக்கு விற்பனை துவங்குகிறது.

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் நவம்பர் 28-ம் தேதி முதல் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் 5T அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com