சத்திரப்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

சத்திரப்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
சத்திரப்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
Published on

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தாசாரிபட்டி, புதுக்கோட்டை, சிந்தல வாடம்பட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சின்னவெங்காயம் நடவு செய்வது வழக்கம்.

கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்த காரணத்தினால் விவசாயிகள் சின்னவெங்காயத்தை நடவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு விதை சின்னவெங்காயம் 10 கிலோ ரூ.800க்கு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் கமி‌ஷன் மண்டிகளில் கொள்முதல் செய்து ஏராளமான விவசாயிகள் நடவு செய்தனர். தற்போது 10 கிலோ விதை சின்ன வெங்காயம் ரூ.1000 முதல் ரூ.1350-க்கு மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்து நடவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு சில்லறை வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விண்ணை தொடும் அளவிற்கு சின்னவெங்காயம் விலை உயர்வடைந்துள்ளது. அனைத்து விதமான சமையலுக்கும் சின்னவெங்காயத்தை ஏராளமான இல்லத்தரசிகள் பயன்படுத்துவார்கள்.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.135-க்கு சில்லறை வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுவதால் இப்பகுதி இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com