பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பற்றி ஆலோசனை நடத்தினார். #NarendraModi #ChandrababuNadidu
பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
Published on

ஆந்திரா மாநிலத்தின் தலைநகரமாக விளங்கிவந்த ஐதராபாத் நகரம் சமீபத்தில் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்து விட்டதால் ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாக்கப்படுகிறது.

அருகாமையில் உள்ள விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளையும் ஒருங்கிணைத்து சுமார் 8,603 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ள அமராவதி பிராந்தியத்தில் தலைநகரம் அமராவதியின் மொத்த பரப்பளவு சுமார் 217 சதுர கிலோமீட்டராக இருக்கும்.

ஒரு பெருநகரத்துக்கு தேவையான மக்கள் தொகை உயரும்வரை அமராவதி நகரத்துக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல்கள் தற்போது நடத்தப்படாது. ஒருங்கிணைந்த பெருநகர குழுமம் என்ற பெயரில் வரிவிதிப்பு உள்ளிட்ட நகரின் நிர்வாக இயந்திரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com