

மெல்போர்ன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த போட்டி தொடரின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாடு திரும்பினார்.
இதனால் இங்கிலாந்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் குணமடைந்து உடல் தகுதியை எட்டி இருக்கிறார். அவர் நேற்று பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது.