போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் - விசாரணைக்கு உத்தரவு

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PolioVaccine
போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் - விசாரணைக்கு உத்தரவு
Published on

புதுடெல்லி:

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா? என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை விநியோகம் செய்யாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #PolioVaccine

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com