விதிமுறைகளின் படியே புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் - ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்

புதுச்சேரி சட்டசபைக்கு மூன்று எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக நியமிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
விதிமுறைகளின் படியே புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் - ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்
Published on

சென்னை:

புதுச்சேரி சட்டசபைக்கு மூன்று எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக நியமிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

பா.ஜ.க நிர்வாகிகளான சாமி நாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை புதுச்சேரி சட்டசபையின் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். ஆனால், மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.

இது தொடர்பான வழக்கி சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், மூன்று நியமன் எம்.எல்.ஏக்களும் விதிமுறைகளின் படியே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com