சரக்கு-சேவை வரி சட்டத்தை மாற்றி அமைக்காவிட்டால் போராட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்

சரக்கு மற்றும் வரிச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரக்கு-சேவை வரி சட்டத்தை மாற்றி அமைக்காவிட்டால் போராட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று வணிகர் தின மாநில மாநாடு நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* மத்திய அரசு அமல் படுத்தி உள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து இதுவரை வணிகர்களிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை. இந்த சட்டம் இந்திய வணிகர்களின் மீது திணிக்கப்படுகிறது. பொதுமக்களையும், வணிகர்களையும் பாதிக்காதவாறு குறைந்த வரி விகிதங்கள் கொண்ட சட்டம் அமைய வேண்டும்.

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதத்தில் சரக்கு மற்றும் வரிச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்.

* இந்திய உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க, வளர்ச்சிப்பெற செய்ய இந்திய வணிக மேம்பாட்டுத் துறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

* வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்திய வணிகத்தின் வளர்ச்சிக்கு தடை கற்களாக இருக்கும் சட்டங்களையும், அதன் விதிமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.

* தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கான முழு செலவுகளும் வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்.

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் வணிகம் மற்றும் தொழிற் துறையினருக்கு நிவாரணம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

* தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை தனித்துறையாக்கி சீரமைக்க வேண்டும்.

* சிறு வணிகர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

* இரவு நேர கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

* விழுப்புரம்- காட்பாடி ரெயில்வே கேட் மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்.

* திருவண்ணாமலை நகரில் ரெயில்வே மேம் பாலம் அமைக்க வேண்டும்.

* கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி மண்டலம் அமைக்க வேண்டும்.

* திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

* பண்ருட்டியில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com