ஐவரி கோஸ்ட்: கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்து - 4 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஐவரி கோஸ்ட்: கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்து - 4 பேர் பலி
Published on

அபித்ஜான்:  

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் பிரெஞ்சு ராணுவத்தினருக்கு தேவையாக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் உள்ள கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது. 

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். 

போர்ட் பவுட்டிற்கு அருகே வந்தபோது கனமழை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்து மீட்கப்பட்டவர்களிடம் அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com