கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பலி

குன்னம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பலியானார்.
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பலி
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கீழமாத்தூரில் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதல்வராக பெரம்பலூரை சேர்ந்த பொறியாளர் இளையராஜா (வயது 40) பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10  மணியளவில் தனது காரில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மேலமாத்தூரில் உள்ள ஒரு குளத்தின் வளைவில் திரும்பிய போது எதிரே அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த  டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கார், லாரி ஆகிய 2 வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com