கேப் டவுன் டெஸ்டில் டீன் எல்கர் சதம்- டி வில்லியர்ஸ் அரைசதம்

கேப் டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்தார். #SAvAUS
கேப் டவுன் டெஸ்டில் டீன் எல்கர் சதம்- டி வில்லியர்ஸ் அரைசதம்
Published on

டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது தென்ஆப்பிரிக்கா 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 40 ரன்னுடனும், அம்லா 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து டீன் எல்கர் உடன் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

முதல்நாள் தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 91 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா முதல் நாள் 2-வது செசனில் 27 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 110 ரன்கள் சேர்த்தது.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் பந்தில் பவுண்டரி விரட்டி டீன் எல்கர் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 178 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் ஹசில்வுட் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com