கனடா 150-வது பிறந்தநாள்: கலைகட்டிய கொண்டாட்டங்கள்

கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கனடா 150-வது பிறந்தநாள்: கலைகட்டிய கொண்டாட்டங்கள்
Published on

கனடா நாட்டின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவக்கி வைத்தார்.

கனடா தின விழாக்களில் சுமார் 5,00,000க்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தின் முன் மிகப்பெரிய விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அக்ரோபாட், இசை கலைஞர்கள் மற்றும் வாண வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கட்டிடங்கள் கண்களை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஒட்டாவாவில் கூடியிருந்த பொதுமக்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். கனடா முழுக்க பல்வேறு நகரங்களிலும் வெவ்வேறு வித்தியாசமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com