பிரையண்ட் பூங்காவில் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் கற்றாழை பூ

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் எகினோசிரஸ் என்ற கற்றாழை பூ பூத்துள்ளது.
கற்றாழை பூ
கற்றாழை பூ
Published on: 

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரையண்ட் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பல்வேறு விதமான பூச்செடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் எகினோசிரஸ் என்ற கற்றாழை பூ பூத்துள்ளது. இந்த செடியில் 5 நாட்கள் மட்டுமே பூ பூத்திருக்கும்.

மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து தான் இதுபோன்ற பூ பூக்கும் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

X