செப்டம்பர் 23-ம் தேதி உ.பி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு செப்டம்பர் 23ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
Published on

லக்னோ:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து அவர்களின் பதவிகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு செப்டம்பர் 23-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உ.பி. சட்டசபையில் செப்டம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து, அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com