இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைதொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடிய போது எடுத்த படம்.
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடிய போது எடுத்த படம்.
Published on

அரியலூர்:

சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அரியலூரில், அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ஜெயங்கொண்டம் தொகுதி ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com