நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம் - ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது.
Egg
Published on
Summary

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், சேலம், ஈரோடு. பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன்மூலம் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.) விலையை நிர்ணயம் செய்கிறது.

இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 5-வது நாளாக...

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 23-ந்தேதி முட்டை விலை ரூ.6.80 ஆக இருந்தது. இது முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். இந்த நிலையில், முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கோழிப்பண்ணையாளர்கள்

16 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது. தொடர்ந்து 7, 8, 9-ந் தேதிகளில் தினமும் 5 காசுகள் உயர்ந்த நிலையில், நேற்று 10 காசுகள் மேலும் உயர்ந்து முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறிக்கோழி ரூ.10 சரிவு

இதேபோல் கிலோவுக்கு ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.85 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதன் விலையை கிலோ ரூ.2 குறைந்து ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை ரூ.5.40 விற்பனை செய்யப்பட்டு வந்தது அதன் விலையை 10 காசுகளாக உயர்த்தி ரூ.5.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com