

சர்வதேச சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணை விலை மாற்றங்களின் அடிப்படையில் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து நிர்ணயிக்கின்றன.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்துள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்த நிலையில் ரூ.2,983-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.200 குறைத்தன. இதனால் ஜூலை மாத விலையான ரூ.3,106-லிருந்து குறைந்து ஆகஸ்டில் ரூ.2,906-க்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் கியாஸ் விலை மாற்றம் செய்யப்பட்டு 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 அதிகரிக்கப்பட்டு ரூ.2916.50-ஆக விற்பனை செய்யப்பட்டது. 14.2 கிலோ எடையிலான வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.957.50 விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.