

கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலையில் பல மாற்றங்கள் தொடர்ந்து வந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணங்களில் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையின் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் இயற்கை வாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.