பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு.. டீசல் மீதான வரி குறைப்பு

ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஏற்றுமதி வரிகளை மறுஆய்வு செய்கிறது.
பெட்ரோல், டீசல்
Published on: 
Summary

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான வரிகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ.0.50-லிருந்து ரூ.2.50 ஆக உயர்த்தியும் டீசல் மீதான வரி ரூ.16-லிருந்து ரூ.8.50 ஆகக் குறைத்தும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மாற்றங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன.

வரிகளில் மாற்றம்

ஈரான் மற்றும் உக்ரைன் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஏற்றுமதி வரிகளை மறுஆய்வு செய்கிறது.

சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களை தொடர்ந்து, சமீப மாதங்களில் இந்த வரி பலமுறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.0.50 ஆகக் குறைக்கப்பட்டது, ஆனால் தற்போது அது ரூ.2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் டீசல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ.25.50 ஆக உயர்த்தியிருந்த அரசு, செப்டம்பர் மாத மறுஆய்வில் அதை ரூ.19 ஆகக் குறைத்தது.

பின்னர் ரூ.16 ஆக குறைக்கப்பட்டு தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு ரூ.8.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com