

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் IPO மூலம், அமெரிக்க பங்குச்சந்தையில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் IPO, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் நேற்று அறிமுகமானது.
IPO (Initial public offering) என்பது ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைத்து, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை குறிக்கிறது.
இந்நிலையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுப் பங்களிப்பாக (IPO) ஆந்த்ரோபிக் உடைய பங்குகள் அமைந்துள்ளன.
முன்னதாக ஆந்த்ரோபிக் தனது IPOவை ஒரு பங்குக்கு 83 டாலர் என விலை நிர்ணயம் செய்து, சுமார் 81.3 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியது.
கூடுதலாக, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா போன்ற கூட்டாளர்களுடன் தனியார் ஒதுக்கீடுகள் மூலம் மேலும் 26 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியது.
இதன் மூலம் அதன் மொத்த நிதி திரட்டல் 107 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா போன்ற உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆந்த்ரோபிக் இணைந்து.
இதன்பின் நேற்று, 'ANT' என்ற குறியீட்டின் கீழ் ஆந்திரோபிக் உடைய பங்கு நாஸ்டாக் பங்குச்சந்தையில் அறிமுகமானது.
83 டாலர் என பட்டியலிடப்பட்ட ஆந்திரோபிக் உடைய ஒரு பங்கு வர்த்தக தொடக்கத்திலேயே 34 சதவிகித பிரீமியத்துடன் 111.50 டாலர் என்ற மதிப்பில் வர்த்தகத்தை தொடங்கியது.
இறுதியாக, சுமார் 17 சதவிகித ஏற்றத்துடன் 97.17 டாலரில் வர்த்தகம் முடிவடைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் சாதனையை முறியடித்தது.
தொழில்நுட்பப் பங்குகளில் விற்பனை அழுத்தம் இருந்தபோதிலும் முதலீட்டாளர்களிடம் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உலகின் முதல் முன்னணி ஏஐ நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.
ஆனால் தங்களுக்கு 6.2 பில்லியன் டாலர் கடன் இருப்பதாகவும், இன்னும் லாபம் ஈட்டவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடே மற்றும் ஆறு இணை நிறுவனர்கள் நிறுவனத்தில் சுமார் 10 சதவீத பங்குகளை வைத்துள்ளதால் ஐபிஓ விலையின் அடிப்படையில் இவர்களின் பங்குகளின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.