

சென்னை:
புச்சிபாபு அகில இந்திய கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 3 தமிழக அணி வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ஆர்.ஐ.பரணி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அணிக்கு இந்திரஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க சிட்டி லெவனுக்கு விஜய் சங்கரும், மாவட்ட லெவனுக்கு ஜெகதீசனும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி.என்.சி.ஏ. தலைவர் லெவன்: பாபா இந்திரஜித் (கேப்டன்), கங்கா ஸ்ரீதர் ராஜு, சூரியபிரகாஷ், பாபா அபராஜித், வாஷிங்டன் சுந்தர், ரோகித், மலோலன் ரங்கராஜன், ரகில்ஷா, விக்னேஷ், லட்சுமண், விஷால், அபிஷேக், அஷ்வத் முகுந்தன், சோனு யாதவ், மோகன் பிரசாத்.
டி.என்.சி.ஏ. சிட்டிலெவன்: பரத்சங்கர் (கேப்டன்), கே.முகுந்த், ஷாருக்கான், விஷால் வைத்யா, அனிருத் சீத்தாராம், சுவாமிநாதன், லோகேஷ்வர், கார்த்திக், யோமகேஷ், ராஜா, கவுசிக் சீனிவாஸ், கிஷண்குமார், கிரன் ஆகாஷ், அலெக்சாண்டர், சித்தார்த்தா.
டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரிநிஷாந்த், சதுர்வேதி, பிரகோஷ ரஞ்சன் பவுல், ராதாகிருஷ்ணன், கவுசிக், அந்தோணிதாஸ், ரோகித், முகமது, ஆனந்த் சுப்பிரமணியன், ஜெகநாத் சீனிவாஸ், சாய் கிஷோர், சந்திர சேகர், சஞ்சய் யாதவ், அபினவ்.