தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இந்த நிலையில் ஹரிகரன் தனது விட்டை பூட்டு விட்டு குடும்பத்துடன் அய்யம்பேட்டைக்கு சென்றார். இந்த நிலையில் அவருடைய வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். வீடு திறந்து கிடப்பது குறித்து அக்கம், பக்கத்தினர் ஹரிகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

பின்னர் இது குறித்து ஹரிகரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com