வங்காள தேசத்திற்கு எதிராக சதம்: 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார் வார்னர்

டாக்காவில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்த வார்னர், தர வரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்காள தேசத்திற்கு எதிராக சதம்: 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார் வார்னர்
Published on

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. வார்னர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்னர் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வார்னர் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

2-வது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார். டாக்கா டெஸ்டிற்கு முன் 11-வது இடத்தில் இருந்து வார்னர், 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 938 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜோ ரூட் 902 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், புஜாரா 876 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், விராட் கோலி 806 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com