சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி- கனிமொழி எம்.பி.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி
Published on

சென்னை:

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், இன்று அதிகாலை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சுஜித்தின் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், கனிமொழி எம்பி, கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குழந்தை சுஜித் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார்.

“சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி. எப்படியாவது அவன் காப்பாற்ற படுவான், காப்பாற்ற படவேண்டும் என்று துடித்த லட்சக்கணக்கான இதயங்கள் இன்று மீளா துயரில். அச்சிறுவனை இழந்து வாடும்  குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட  அனைவருக்கும் நன்றி” என கனிமொழி கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com