இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை மாற்ற திட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுக்கு வாரிய பொறுப்பு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை மாற்ற திட்டம்
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி கட்டப்பட்டு வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமி கட்டிய சில வருடங்களில் இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகம் அந்த கட்டிடத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. இந்த முடிவு குறித்து கருத்து அறிய இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாரிய பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா கடிதம் எழுதி இருக்கிறார். உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com