

சண்டிகர்:
அரியானா சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலலையில், 78 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியிலும், அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா டோஹானா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.