குஜராத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 34 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
Published on

182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. இதற்காக வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

அவ்வகையில், 34 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. அதில், லால்ஜிபாய் பிரஜாபதி (பாலன்பூர்),  ஜெய்நாராயண்பாய் வியாஸ் (சித்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். ரதோன்பூர் தொகுதியில் லாவிங்ஜி தாக்கோர் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com