தா.பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம்

தா.பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தா.பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம்
Published on

தா.பேட்டை:

தா.பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நகர தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மனோகரன், முசிறி தொகுதி பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் சித்ராதேவி உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர்.

அப்போது தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மரக்கன்றுகள் நடுதல், தூய்மை பாரதம் உறுப்பினர் சேர்ப்பு, கட்சி கொடியேற்றுதல் மற்றும் மத்திய அரசின் சாதனை திட்டங்களை கிராம மக்களுக்கு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தா.பேட்டை கடைவீதியில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com